வாரியர் கிளப் சாம்பியன்
|புதுவையில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் வாரியர் கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது.
புதுச்சேரி
பாண்டிச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
போட்டியின் முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 'வாரியர் கிளப்' அணி பெற்றது. 2-ம் இடத்தை 'பாக்ஸ் அன்ட் கிராஸ் கிளப்' பிடித்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் கோபு, துணைத் தலைவர்கள் பாபு, கலியபெருமாள், புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேசன் தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.