< Back
புதுச்சேரி
அரசு பாலிடெக்னிக் மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி சிறப்பு முகாம்
புதுச்சேரி

அரசு பாலிடெக்னிக் மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
22 July 2023 11:11 PM IST

காரைக்கால்மேடு அரசு பாலிடெக்னிக் மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி சிறப்பு முகாம் நடந்தது.

காரைக்கால்

காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இந்திய அரசின் அடல் புத்தாக்க திட்டம், நிதிஆயோக் ஆகியவற்றின் கீழ் இயங்கும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் வளாகத்தில் உள்ள அடல் இன்குபேஷன் சென்டரில் நடந்த சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

தலைமை செயல் அதிகாரி விஷ்ணுவரதன் மாணவிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் டிசைன், இன்டர்நெட் ஆப் திங்ஸ், ஆளில்லாத பறக்கும் டிரோன் ஆகிய பொறியியல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி செயல் விளக்கத்துடன் பயிற்று வித்தார். தொடர்ந்து இன்குபேஷன் சென்டரின் பலவகையான பொறியியல் தொழில்நுட்ப தொழில் முனைவு தொடக்க கட்டமைப்பு வசதிகளையும் மாணவிகள் பார்வையிட்டனர். இக்கல்லூரிகளின் மாணவிகளுடன் அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் விமலன், ராஜபாலன், ஆர்த்தி, திவ்யா மற்றும் ஆய்வக பயிற்றுவிப்பாளர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்