வில்லியனூர் கொம்யூனில் கிராமசபை கூட்டம்
|காந்தி ஜெயந்தியன்று வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில் கிராமசபை கூட்டம் நடைபெறகிறது.
புதுச்சேரி
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தக்குபட்ட 24 கிராம பஞ்சாயத்துகளான சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர்- அகரம், வில்லியனூர் (மேற்கு), வில்லியனூர் (மத்தியம்), வில்லியனூர் (கிழக்கு), கோட்டைமேடு, சுல்தான்பேட்டை (தெற்கு), சுல்தான்பேட்டை (வடக்கு), குரும்பாபேட், மணவெளி (வடக்கு), மணவெளி (கிழக்கு), ஒதியம்பட்டு (கிழக்கு), ஒதியம்பட்டு (மேற்கு), கணுவாப்பேட்டை, உறுவையாறு, திருக்காஞ்சி, மங்கலம், சாத்தமங்கலம், சிவராந்தகம், அரியூர் (தெற்கு) மற்றும் அரியூர் (வடக்கு) ஆகிய கிராமங்களில் வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கிராம மக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.