< Back
புதுச்சேரி
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

தினத்தந்தி
|
17 Aug 2023 10:50 PM IST

கொடிக்கம்பத்தை அகற்றியதால் வில்லியனூர் போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

வில்லியனூர்

வில்லியனூரில் புதுச்சேரி-விழுப்புரம் பைபாஸ் சாலையில் 60 அடி உயரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்காக அனுமதி எதுவும் பெறப்படாத நிலையில் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் ஆறுமுகம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சப்-கலெக்டர் மகாதேவன் உத்தரவின்பேரில் தாசில்தார் சேகர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வில்லியனூர் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

இதை கண்டித்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் வில்லியனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிடுமாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்