< Back
புதுச்சேரி
கால்நடை மருத்துவ முகாம்
புதுச்சேரி

கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
21 Sept 2022 9:26 PM IST

மாதூர் வேளான் அறிவியல் நிலையம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

காரைக்கால்

காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய பருவநிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் திட்டத்தின் (நிக்ரா) கீழ் திருநள்ளாறு கொம்யூனை சேர்ந்த அத்திப்படுகை, பேட்டை மற்றும் நெய்வாச்சேரி ஆகிய கிராமங்களில் காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பம் குறித்து பல்வேறு பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாளை (வியாழக்கிழமை) கால்நடை மருத்துவ முகாம் அத்திப்படுகை கிராமத்தில் நடத்தப்படுகிறது. எனவே அத்திப்படுகை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தங்கள் கால்நடைகளை இந்த மருத்துவ முகாமிற்கு அழைத்துவந்து வேண்டிய சிகிச்சைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல், பேட்டை மற்றும் நெய்வாச்சேரி கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம் வரும் வாரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்