மதுவில் விஷம் கலந்து குடித்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
|கடன் தொல்லையால் மதுவில் விஷம் கலந்து குடித்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்
கடன் தொல்லையால் மதுவில் விஷம் கலந்து குடித்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுபார் அருகில்...
கிருமாம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மது பார் உள்ளது. இங்கு காசாளராக முருகன் (வயது 51) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் பாருக்கு அருகே ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். உடனே அவரை முருகன் மீட்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கிராம நிர்வாக அலுவலர்
அப்போது உயிரிழந்த நபர் கடலூர் மாவட்டம் முட்லூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த தாமரை செல்வன் (39) என்பதும், அவர் மேல் புவனகிரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த தாமரை செல்வன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. தற்கொலை செய்த முருகனுக்கு தீபாகவுரி என்ற மனைவியும், 1½ வயது மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.