< Back
புதுச்சேரி
முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் விவரம் அறிவிப்பு
புதுச்சேரி

முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் விவரம் அறிவிப்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 10:45 PM IST

முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் காலியிடங்களை சென்டாக் அறிவித்துள்ளது.

புதுச்சேரி

முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் காலியிடங்களை சென்டாக் அறிவித்துள்ளது.

காலியிடங்கள்

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடைபெறுகிறது. இதில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு முடிந்து அந்த முடிவுகளை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த கலந்தாய்வுக்கு பின்னர் புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை படிப்பில் காலியிடங்கள் ஏதும் இல்லை. அதேநேரத்தில் அரசு இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளான பிம்ஸ் 5, மணக்குள விநாயகர் 7, வெங்கடேஸ்வரா கல்லூரியில் 10 இடங்கள் காலியாக உள்ளன.

மேலும் நிர்வாக இடஒதுக்கீட்டில் பிம்ஸ்-10, மணக்குள விநாயகர்-10, வெங்கடேஸ்வரா கல்லூரியில் 10 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது.

கட்டணம்

இதற்கு சென்டாக் இணையதளத்தில் www.centac puducherry.in இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள அரசு கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதாவது அரசு இடஒதுக்கீட்டில் சேருபவர்கள் ரூ.7 லட்சத்து 95 ஆயிரமும், நிர்வாக இடஒதுக்கீட்டில் சேருபவர்கள் ரூ.23 லட்சத்து 90 ஆயிரமும் செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு கலந்தாய்வில் இடம் ஒதுக்கப்படாவிட்டால் அவை திருப்பி வழங்கப்படும். இடம் கிடைத்து மாணவர்கள் சேராவிட்டால் பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

மேற்கண்ட தகவலை சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்