< Back
புதுச்சேரி
பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா
புதுச்சேரி

பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

தினத்தந்தி
|
13 Oct 2023 10:57 PM IST

ரெட்டியார்பாளையத்தில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி

புதுவை ரெட்டியார்பாளையத்தில் மத்திய தொழிலாளர் துறை அலுவலகம் அருகே சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அப்பகுதியை சே்ாந்த சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்தநிலையில் பூங்காவில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் செடிகள் வளர்ந்து புதர் போல கிடக்கிறது. மேலும் அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் உட்காருவதற்காக போடப்பட்ட சிமெண்டு இருக்கைகளும் சேதமடைந்துபோய் உள்ளது. இதனால் பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.பூங்கா பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் இங்கு வந்து மதுகுடிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்