< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
|24 Oct 2023 8:16 PM IST
கோட்டுச்சோியில் புதுவை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
கோட்டுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளாக படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் புதுச்சேரி அரசு இருந்து வருகிறது. இதை கண்டித்து காரைக்கால் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் மதகடி பகுதியில் நடந்தது. இதில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.