< Back
புதுச்சேரி
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுச்சேரி

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
15 Oct 2023 10:24 PM IST

லாஸ்பேட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்சூர் பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த உடன் அங்கு நின்றுகொண்டிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலு (வயது 24), லாஸ்பேட்டை மேயர் நந்தகோபால் தெருவை சேர்ந்த சதானந்தம் (19) என்பதும், அவர்கள் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 240 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்