< Back
புதுச்சேரி
பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மரியாதை
புதுச்சேரி

பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மரியாதை

தினத்தந்தி
|
21 Oct 2023 7:20 PM IST

பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய எல்லைப்பகுதியில் நடந்த மோதலில் 10 போலீசார் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அவர்களது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர் நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இதன்படி காவலர் நினைவு தினம் புதுவையில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

மலர்வளையம்

இதையொட்டி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் உள்ள காவலர் நினைவுதூண் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பணியின்போது உயிர்நீத்த புதுவை போலீசார் 13 பேர் உள்பட நாடு முழுவதும் உயிர் நீத்தவர்களின் பெயர்களை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் வாசித்தார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ., டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

21 குண்டுகள் முழங்க...

அதைத்தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள். அத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

மேலும் செய்திகள்