< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கூடுதல் மின் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்
|3 Oct 2023 10:04 PM IST
தவளக்குப்பம் சடா நகரில் கூடுதல் மின் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் சடா நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின் பழுது ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் மின்திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் வைக்க மின்துறை நடவடிக்கை எடுத்தது. ஏற்கனவே இருந்த குறைந்த மின் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டு, அதிக மின் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், சபாநாயகர் செல்வம் உத்தரவின்படி இன்று நிறுவப்பட்டது. இந்த பணிகள் மின்துறை இளநிலை பொறியாளர் திருமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. புதிய மின்மாற்றி மூலம் அப்பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மின்மாற்றி மாற்றியமைக்கும் பணியால் அப்பகுதியில் நேற்று மின்வினியோகம் தடை செய்யப்பட்டு இருந்தது.