< Back
புதுச்சேரி
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
புதுச்சேரி

போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தினத்தந்தி
|
21 Jun 2023 10:27 PM IST

புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய்ப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

புதுச்சேரி காவல்துறையில் 5 இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 9 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு (பணியாற்றிய இடம் அடைப்புக்குறிக்குள்) :-

இன்ஸ்பெக்டர்கள் பிரவீன்குமார் (புதுச்சேரி உளவுத்துறை) காரைக்கால் உளவுத்துறைக்கும், சஜித் (சிக்மா செக்யூரிட்டி) மாவட்ட சட்ட நிர்வாக பிரிவுக்கும், விஸ்வநாதன் (சிக்மா) டி.ஜி.பி. செயலராகவும், ரமேஷ் பாபு (ஆயுதப்படை) சிக்மா பிரிவுக்கும், வெங்கடாசலதி (சிக்மா) ஒதியஞ்சாலை நிலைய அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் ரெனிகுமார் (சிக்மா) மாகி நிலைய அதிகாரியாகவும், பிரதீப் (மாகி) மாகி கடலோர காவல்படைக்கும், ரெனிமேரி டேவிட் (ஆயுதப்படை) வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பிரமோத் (ஐ.ஜி. செயலர்) சீனியர் போலீஸ் சூப்பிரண்டு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, காவலர்கள் என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை புதுவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்