< Back
புதுச்சேரி
காரைக்காலில் அதிகாரிகள் இடமாற்றம்
புதுச்சேரி

காரைக்காலில் அதிகாரிகள் இடமாற்றம்

தினத்தந்தி
|
3 July 2023 9:59 PM IST

காரைக்காலில் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்,.

காரைக்கால்

காரைக்கால் குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் சுபாஷ், காரைக்கால் உள்ளாட்சித்துறை துணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அந்த பணியில் இருந்து சச்சிதானந்தம் குடிமைப்பொருள் வழங்கல்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சச்சிதானந்தம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலையின் மேலாண் இயக்குனர் பொறுப்பினை கூடுதலாகவும், காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி பொறுப்பினையும் கவனிப்பார்.

இதற்கான உத்தரவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்