< Back
புதுச்சேரி
புதுச்சேரி
போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி
|21 Aug 2023 10:43 PM IST
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு காப்பீடு பெறுவது குறித்து புதுவை போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுவை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் இன்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு பெறுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த், அரசு தரப்பு சிறப்பு வக்கீல் அருண் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கினர்.முகாமில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்குமார், மாறன், ராஜேசேகர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்துகொண்டனர்.