கைதிகளுக்கு காலணி தயாரிக்க பயிற்சி
|காலாப்பட்டு மத்திய சிறையில் 2-ம் கட்டமாக கைதிகளுக்கு காலணி தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
காலாப்பட்டு
காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் யோகா, ஓவியம், நடனம் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
சிறை வளாகத்தில் 2.6 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 60 வகையான பழங்கள், மூலிகை செடிகள் என 50 ஆயிரம் செடிகள் வளர்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் உத்தரவின்பேரில் சென்னை மத்திய காலணி பயிற்சி மையம் மூலம் கைதிகளுக்கு காலணி தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 20 கைதிகள் பயிற்சி பெற்றனர்.
இந்தநிலையில் தற்போது 2-வது கட்ட பயிற்சி வகுப்புகள் சிறைத்துறை வளாகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழாவில் சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். கைதிகளுக்கு பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் 20 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.