< Back
புதுச்சேரி
திருபுவனையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
புதுச்சேரி

திருபுவனையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
1 March 2023 3:50 PM GMT

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால் திருபுவனையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தவித்தனர்.

திருபுவனை

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால் திருபுவனையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தவித்தனர்.

ஒருவழி பாதையாக மாற்றம்

விழுப்புரம் - நாகை இடையே நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் - புதுச்சேரி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக திருபுவனை, திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணி காரணமாக பல இடங்களில் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் திருபுவனையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் செல்கின்றன.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்களால் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையிலும் ஒருவழிப்பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன.

இந்த போக்குவரத்து நெரிசலில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களும் சிக்கி தவித்தன. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதேபோல் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்களும் தவித்தனர்.

தினந்தோறும் பிரச்சினை

நீண்ட நேரத்துக்கு பிறகு கல்லூரி மாணவர்களே போக்குவரத்தை சரிசெய்தனர். இதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து சீரானது. தினந்தோறும் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருவதால், விரைவில் சாலை அமைக்கும் பணியை முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்