< Back
புதுச்சேரி
புதுவையில் நாளை போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி

புதுவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
6 Aug 2023 11:00 PM IST

ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரஜேந்திரகுமார் யாதவ் கூறியதாவது:-

போக்குவரத்து மாற்றம்

ஜனாதிபதி புதுவை வருகையை முன்னிட்டு நகரில் நாளை (திங்கட்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வாகனம் செல்லும் நேரத்தில் அந்த சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்ல அனுமதி கிடையாது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஏர்போர்ட் சாலையில் இருந்து லதா ஸ்டீல் கவுஸ் சந்திப்பு வரை கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள் கோரிமேட்டில் இருந்து கனரக ஊர்தி முனையம், மேட்டுப்பாளையம் சந்திப்பு, குண்டுசாலை வழியாக விழுப்புரம் சாலை, இந்திராகாந்தி சிலை வந்து புதிய பஸ்நிலையம் செல்ல வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவில் சந்திப்பு வழியாக திரும்பி செல்ல வேண்டும். ராஜீவ்காந்தி சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் சாமி பிள்ளை தோட்டம் அருகே வலது பக்கம் திரும்பி லாஸ்பேட்டை சாலை, காலேஜ் ரோடு, நாவற்குளம் சாலை வழியாக கோரிமேடு செல்ல வேண்டும்.

கடலூர் சாலையில் தடை

பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை இந்திராகாந்தி சிலை சதுக்கத்தில் இருந்து மரப்பாலம் வழியாக கடலூர் சாலையில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுளன. அதாவது, இந்திராகாந்தி சிலை சதுக்கத்தில் இருந்து வில்லியனூர் வழியாக கடலூர் செல்ல வேண்டும். அதுபோல பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கதில் இருந்து புஸ்சி வீதி நோக்கி வாகனங்கள் செல்லக்கூடாது. இந்த வாகனங்கள் நெல்லித்தோப்பு சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் சாலை வழியாக செல்ல வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவை வரும் வாகனங்கள் முத்தியால்பேட்டை, அஜந்தா சந்திப்பு, அண்ணாசாலை, வள்ளலார் சாலை, திருவள்ளுவர் சாலை வழியாக செல்ல வேண்டும்.

பாகூர் வழியாக மாற்றம்

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் கன்னியகோவிலில் இடது புறமாக திரும்பி பாகூர், அரங்கனூர், கரிக்கலாம்பாக்கம், உறுவையாறு, வில்லியனூர், மூலக்குளம், வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும்.

அதுபோல புதுவையில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்திராகாந்தி சிலை சதுக்கம், மூலக்குளம், வில்லியனூர், உறுவையாறு, கரிக்கலாம்பாக்கம், அரங்கனூர், பாகூர், கன்னியகோவில் வழியாக செல்ல வேண்டும்.

வாகனங்களை நிறுத்தக்கூடாது

வில்லியனூரில் இருந்து முருங்கப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வில்லியனூர் கோட்டை மேட்டில் இருந்து திரும்பி உருவையாறு, கரிக்கலாப்பாக்கம், பாகூர் வழியாக செல்ல வேண்டும்.

இதே போல் கடற்கரை சாலை, தூய்மா வீதி, செயின் லூயிஸ் வீதி, புஸ்சி வீதியில் ஆம்பூர் சாலை முதல் கடற்கரை சாலை வரை, நேரு வீதியில் ஆம்பூர் சாலை முதல் செயின் வீதி வரை, மணக்குள விநாயகர் கோவில் வீதியில் ரங்கப்பிள்ளை வீதி முதல் துப்புய் வீதி வரை, பிரான்சுவா மார்த்தேன் வீதியில் ரங்கப்பிள்ளை வீதி முதல் துப்புய் வீதி வரை வாகனங்கள் நிறுத்தக்கூடாது.

இதே போல் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செல்லும் ஆசிரமம் பகுதியில் காலை 8 மணி முதல் மக்கள் செல்ல அனுமதி கிடையாது. ஜனாதிபதி செல்லும் சிறிது நேரத்திற்கு முன்பாக அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறினார். பேட்டியின் போது போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்