< Back
புதுச்சேரி
புதுச்சேரி
டிராக்டர் திருடியவர் கைது
|9 July 2023 9:27 PM IST
தவளக்குப்பம் அருகே டிராக்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் முத்துபிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். சம்பவத்தன்று இவர், தனது டிராக்டரை டி.என்.பாளையம் பகுதியில் நிறுத்தி விட்டு கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மாயமானது. மர்மநபர் யாரோ டிராக்டரை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டிராக்டரை திருடியது, கடலூர் மாவட்டம் கீழ் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற தனசேகரன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டரையும் மீட்டனர்.