< Back
புதுச்சேரி
மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி
புதுச்சேரி

மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி

தினத்தந்தி
|
6 Aug 2023 4:05 PM GMT

காரைக்கால் கடற்கரை முகத்துவாரம் பகுதியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி சுற்றுலா பயணிகள் மீன்பிடி படகுகளில் சவாரி செய்து வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்கால் கடற்கரை முகத்துவாரம் பகுதியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி சுற்றுலா பயணிகள் மீன்பிடி படகுகளில் சவாரி செய்து வருகின்றனர்.

படகு சவாரி

காரைக்கால் கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அவர்களில் பலர் அரசலாற்றில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் செயலபட்ட படகு துறை மூலம் படகு சவாரி செய்து வந்தனர்.

ஊழியர்களின் சம்பள பிரச்சினை, போதிய பராமரிப்பு இல்லாததால் படகு சவாரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. அரசலாற்றின் முகப்பில் படகுத்துறை சிதலமடைந்து காணப்படுகிறது.

பாதுகாப்பு இல்லை

இந்த நிலையில் காரைக்காலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மீனவர்கள் கடலுக்குள் படகு சவாரி அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு படகு சவாரி செய்யும் போது சுற்றுலா பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு வசதியும் செய்து கொடுப்பது இல்லை. 5 பேர் வரை செல்லக்கூடிய படகில் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மீனவர்கள் செயல்படுகின்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். படகு சவாரியை பாதுகாப்புடன் மேற்கொள்ள இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்