< Back
புதுச்சேரி
புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தினத்தந்தி
|
14 Nov 2023 7:03 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை வெளுத்து வாங்கியது.

புதுச்சேரி,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

எனவே இந்த தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

மேலும் செய்திகள்