< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|6 Jun 2023 10:27 PM IST
திருபுவனையில் வீட்டில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை
திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஏட்டு ஜானகிராமன் மற்றும் போலீசார் மதகடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், திருபுவனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருபுவனை திருமுருகன் நகர் பகுதியில் ஒரு வீட்டின் அருகில் சந்தேகப்படும்படியாக இளைஞர்கள் நடமாட்டம் இருந்தது. அங்கு போலீசார் விசாரித்ததில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த ஸ்ரீதர் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் மற்றும் ஒரு செல்போன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.