< Back
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புதுச்சேரி

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
8 Nov 2022 9:42 PM IST

காரைக்காலில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருபட்டினம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திரு-பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளரான முதலிமேட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 140 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்