< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|5 Sept 2023 9:19 PM IST
காரைக்காலில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் திருநள்ளாறு சாலை சந்தை திடல் அருகே நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் பிள்ளைத் தெருவாசலை சேர்ந்த திவாகர் (வயது45) என்பவரை கைது செய்து செய்தனர்.