< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|2 Aug 2023 10:38 PM IST
கோட்டுச்சேரி அருகே புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் நேற்று பூவம் குப்புசெட்டிச்சாவடி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கோட்டுச்சேரி முத்துசாமிப்பிள்ளை வீதியை சேர்ந்த மகாராஜா (வயது 36) என்பதும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.