< Back
புதுச்சேரி
வாலிபரிடம்   நகை, கார் பறிமுதல்
புதுச்சேரி

வாலிபரிடம் நகை, கார் பறிமுதல்

தினத்தந்தி
|
19 Oct 2022 10:48 PM IST

புதுவை மணகுப்பம் சங்கரண்பேட்டையில் ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி

புதுவை மணக்குப்பம் சங்கரன்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது28). இவர் கோரிமேடு போலீஸ் குடியிருப்பை சேர்ந்த லூர்து பெலிக்ஸ் (35) என்பவரிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ரூ.10 லட்சத்தை வாங்கி தலைமறைவானார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரனை தேடிவந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் ராஜசேகர் சரணடைந்தார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ராஜசேகரை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் ராஜசேகர் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 13 பவுன் நகைகள், 1 கார், பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்