< Back
புதுச்சேரி
மதுபோதையில் இருந்த பெண்ணிடம்3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
புதுச்சேரி

மதுபோதையில் இருந்த பெண்ணிடம்3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
10 Aug 2023 9:34 PM IST

மாகியில் மதுபோதையில் இருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

மாகி

மாகியில் மதுபோதையில் இருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

தங்க சங்கிலி பறிப்பு

கேரள மாநிலம் வடகரா பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 52). அங்குள்ள ஓட்டலில் பணி செய்து வருகிறார். இவருக்கும், வயநாடு பகுதியை சேர்ந்த முகமது ரியாஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

சம்பவத்தன்று அவர்கள் புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் அசதியில் 2 பேரும் தூங்கி விட்டனர்.

கள்ளக்காதலன் கைது

மறுநாள் காலையில் இந்திரா கண் விழித்து பார்த்த போது அவரது 3 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. முகமது ரியாசும் மாயமாகி இருந்தார். குடிபோதையில் தூங்கியபோது முகமது ரியாஷ் 3 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா மாகி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது முகமது ரியாஷ் வயநாடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்