< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி
|22 July 2023 9:59 PM IST
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
புதுச்சேரி
புதுவை பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. 9.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி அறையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலையில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.