< Back
புதுச்சேரி
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
புதுச்சேரி

திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
5 July 2023 9:27 PM IST

புதுவை திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் இன்று நடைப்பெற்றது.

அரியாங்குப்பம்

தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பத்தில் உள்ள பழமையான திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கரகம், பக்காசூரனுக்கு சோறு போடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று காலை சாமிகளுக்கு விஷேச அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. அதனைதொடர்ந்து திரவுபதி-அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.

மேலும் செய்திகள்