< Back
புதுச்சேரி
தனித்தனி விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம்
புதுச்சேரி

தனித்தனி விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
6 Feb 2023 9:34 PM IST

புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் சிறுவன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்

பாகூர்

தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 52). இவர் தனது நண்பர் ரவிச்சந்திரன் (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். தவளக்குப்பம் அருகே புதுச்சேரி - கடலூர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மினி வேன் திடீரென்று அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கிளிஞ்சிக்குப்பம் நல்லப்பரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் நித்திஷ் (12) அரியாங்குப்பத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று பிரியாணி வாங்கிக்கொண்டு புதுச்சேரி - கடலூர் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்துகள் தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்