< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மீன் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல்
|31 Aug 2023 11:04 PM IST
புதுவை பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 50). மீனவரான இவர், புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மனைவியுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் வம்பாகீரபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், கார்த்தி, வாழுமுனி, பன்னீர், கோபி, சிவானந்தம், குமார் ஆகிய 7 பேர் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்போது வியாபாரம் சரியாக நடைபெறவில்லை, எனவே பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 7 பேரும் வேலுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்.