< Back
புதுச்சேரி
மருத்துவ சான்றிதழ் பெற அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்
புதுச்சேரி

மருத்துவ சான்றிதழ் பெற அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்

தினத்தந்தி
|
10 July 2023 11:56 PM IST

புதுவையில் போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள் மருத்துவ சான்றிதழ் பெற அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள்

புதுவை காவல்துறையில் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டு கடந்த மாதம் 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த பட்டியலில் 250 பேர் இடம் பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 26, 27, 28-ந்தேதிகளில் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் போலீஸ் பணியில் சேர தேர்வானவர்கள் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ச்சியாக முகாமிட்டு வருகின்றனர். அவர்களை அரசு டாக்டர்கள் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்து வருவதால் சான்றிதழ் பெறும் பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும் செய்திகள்