< Back
புதுச்சேரி
வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி

வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
13 July 2023 10:23 PM IST

பாகூர் அருகே வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்

பாகூர் அடுத்த சேலியமேடு சின்னப்பேட் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). டிரைவர். நேற்று இவர் தனது நண்பர்களான ரிஷிகுமார் (17), தயாநிதிமாறன் (17), பூபேஷ் (18) ஆகியோருடன் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு கடைக்கு பானிபூரி சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகியோர் அவர்களை வழிமறித்து எங்கள் ஊருக்குள் எப்படி நீங்கள் வரலாம் என்று தகராறு செய்து கல்லாலும், கட்டையாலும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாககூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சந்துரு உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்