< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வாலிபர்களை மதுபாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
|3 July 2023 10:46 PM IST
புதுவையில் வாலிபர்களை மதுபாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோரிமேடு
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). இவர் பிருந்தாவனம் பகுதியில் உள்ள மதுபாரில் தனது நண்பர்களுடன் மதுகுடித்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து மது குடித்த 3 பேர் பிரவீனை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் தனது தம்பி பிரசாந்துக்கு செல்போனில் தொடர்பு செய்து அழைத்துள்ளார்.
உடனே பிரசாத் தனது நண்பர் சண்முகசுந்தரத்தை (27) அழைத்து கொண்டு மதுபாருக்கு வந்தார். அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் பிரசாந்த், சண்முகசுந்தரம் மதுபாட்டிலால் தாக்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.