< Back
புதுச்சேரி
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் வீட்டில் ரூ.4¼ லட்சம் திருட்டு
புதுச்சேரி

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் வீட்டில் ரூ.4¼ லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
3 Sept 2023 10:11 PM IST

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் வீட்டில் ரூ.4¼ லட்சம் திருடியது தொடர்பாக வேலைக்கார பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் வீட்டில் ரூ.4¼ லட்சம் திருடியது தொடர்பாக வேலைக்கார பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணாநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (வயது 60). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது புதுவைக்கு வந்து செல்வது வழக்கம். வீட்டு வேலைக்காக 2 பெண்களை அமர்த்தி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராம் புதுவைக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் ஒரு பையில் வைத்திருந்த 4,800 யூரோவை (ஐரோப்பிய பணம்) திருட்டு போனது. இதன் இந்திய மதிப்பு ரூ.4 லட்சத்து 28 ஆயிரத்து 736 ஆகும்.

2 பெண்களிடம் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வெளியே இருந்து யாரும் வீட்டுக்கு உள்ளே வரவில்லை என்பது தெரியவந்தது.

விசாரணை

எனவே, சாய்ராம் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன்பேரில் போலீசார் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்