< Back
புதுச்சேரி
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுச்சேரி

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

தினத்தந்தி
|
21 April 2023 7:37 PM IST

புதுச்சோியில் வீடு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவை குயவர்பாளையம் சுப்ரமணிய சிவா வீதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 47). இவர் சுந்தரமேஸ்திரி வீதியில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதுபார்த்த 2 மோட்டார் சைக்கிள்களை தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி சங்கிலியால் இணைத்து பூட்டுபோட்டு நிறுத்தி இருந்தார்.இந்த மோட்டார் சைக்கிள்களை நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்