< Back
புதுச்சேரி
3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுச்சேரி

3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

தினத்தந்தி
|
18 Oct 2023 12:28 AM IST

புதுவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). தொழிலாளி. இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க சென்றார். அங்குள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் குமார் பால் (45). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் புதுச்சேரி லாஸ்பேட்டை எழில்நகரை சேர்ந்தவர் அமுதா (35). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை மர்மநபர் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்