3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
|புதுவையில் வெவ்வேறு இடங்களில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை
புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகரை சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள் (வயது 24). லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் கதவு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (40). இரும்பு வியாபாரி. சம்பவத்தன்று தனது ஸ்கூட்டரை மேட்டுப்பாளையம் தனியார் மதுக்கடை அருகில் நிறுத்தியிருந்தார். அதனை மர்மநபர் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுவை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் பெரிய பாளையத்தம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (34). சம்பவத்தன்று புதுவை அரசு பொது மருத்துவமனை முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து குறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.