< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வீட்டுக்கு பூட்டு போட்டு மிரட்டிய வாலிபர் கைது
|16 Aug 2023 11:03 PM IST
கோட்டுச்சேரியில் வீட்டுக்கு பூட்டு போட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்கிற சந்தோஷ் (வயது 39). தற்போது இவர் ராயன்பாளையம் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் படுத்திருந்தார். அப்போது அதே தெருவில் வசிக்கும் கண்ணன் மகன் விசாகன் (19), முன் விரோதம் காரணமாக வீட்டில் கொண்டிருந்த சந்தோஷின் வீட்டுக் கதவை வெளிப்புறமாக பூட்டி சென்று விட்டார். நீண்ட நேரம் கழித்து விசாகன் கதவைத் திறந்து விட்டுள்ளார். அவரிடம், ஏன் இப்படிச் செய்தாய்? என்று கேட்ட சந்தோஷை, வலது கையில் கடித்து, மார்பில் நகங்களால் கீறியும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாகனைக் கைது செய்தனர்.