< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வீடுகளை நோட்டமிட்ட வாலிபர் கைது
|27 Aug 2023 9:48 PM IST
காரைக்கால் அருகே கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீடுகளை நோட்டமிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
நிரவி போலீசார் விழிதியூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற ராஜகோபால் (வயது 27) என்பதும், கொள்ளையடிப்பதற்காக வீடுகளை நோட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.