< Back
புதுச்சேரி
தங்கம், வைர நகைகளை ஆட்டோவில் தவற விட்ட பெண்
புதுச்சேரி

தங்கம், வைர நகைகளை ஆட்டோவில் தவற விட்ட பெண்

தினத்தந்தி
|
30 May 2022 11:00 PM IST

புதுவை புதிய பஸ் நிலையத்தில் சென்ற போது ஆட்டோவில் பெண் தவறவிட்ட தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டன.

புதுச்சேரி

புதுவை புதிய பஸ் நிலையத்தில் சென்ற போது ஆட்டோவில் பெண் தவறவிட்ட தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டன.

ஆட்டோவில் பயணம்

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் மது (வயது 31). பெண்ணான இவர் குருசுக்குப்பத்தில் தற்போது வசித்து வருகிறார். பெங்களூரு சென்று விட்டு இன்று புதுச்சேரி திரும்பினார். தன்னுடன் 5 பைகளை எடுத்து வந்திருந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து குருசுக்குப்பம் சென்றார்.

மீண்டும் ஆட்டோவை அனுப்பி விட்ட நிலையில் தனது பைகளில் ஒரு பையை மட்டும் எடுக்கவில்லை. அதில் தங்கம், வைரம், பிளாட்டின நகைகளை காய்கறியுடன் வைத்திருந்தார். அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த பையுடன் ஆட்டோ பஸ்நிலையம் திரும்பிவிட்டது. வீட்டிற்குள் சென்றபிறகு தான் அவருக்கு நகை பையை தவறவிட்ட விவரம் தெரியவந்தது. உடனே உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் போலீசார் சம்பந்தபட்ட ஆட்டோவை தேடினார்கள்.

நகைகள் மீட்பு

அப்போது அய்யனார் கோவில் அருகே ஆட்டோ நிற்பதை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது காய்கறிகளுடனான நகை பை ஆட்டோவில் இருந்தது. பின்னர் அதை போலீசார் மீட்டனர்.

இதுபற்றி தெரிவித்து போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து மதுவிடம் நகைகளை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்