< Back
புதுச்சேரி
வீடுகளை நோட்டமிட்ட வாலிபர் சிக்கினார்
புதுச்சேரி

வீடுகளை நோட்டமிட்ட வாலிபர் சிக்கினார்

தினத்தந்தி
|
13 July 2023 10:19 PM IST

கோட்டுக்சேரியில் கொள்ளையடிக்கும் நோக்கில் வீடுகளை நோட்டமிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

காரைக்கால் நகர போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் எம்.எம்.ஜி.நகர் 3-வது குறுக்குத்தெருவில் கொள்ளையடிக்கும் நோக்கில் வீடுகளை ஒருவர் நோட்டமிட்டு கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த கார்த்தி (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்