< Back
புதுச்சேரி
கண்காணிப்பு கேமரா செயல்பட தொடங்கியது
புதுச்சேரி

கண்காணிப்பு கேமரா செயல்பட தொடங்கியது

தினத்தந்தி
|
23 Aug 2023 9:49 PM IST

பாகூர் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயல்பட தொடங்கியது.

பாகூர்

நாட்டின் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி புதுவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட்டு, தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பாகூர் போலீஸ் நிலையத்தில் கைதிகள் அறை, சப் இன்ஸ்பெக்டர் அறை, பொதுமக்கள் புகார் அளிக்கும் இடம், ஆவணங்கள் வைத்திருக்கும் இடம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கியது.கண்காணிப்பு கேமரா பொருத்தியிருப்பதன் மூலம் லஞ்சம், கைதிகள் மரணம் உள்ளிட்டவை தடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்