< Back
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது
புதுச்சேரி

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது

தினத்தந்தி
|
10 Oct 2023 11:59 PM IST

புதுவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள அரசு பள்ளி அருகில் சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையின் உரிமையாளரான தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்த குமார் (வயது 43) என்பவரை கைது செய்தனர். பின்னர் அந்த கடையில் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் மற்றொரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரான சண்முகாபுரத்தை சேர்ந்த தனசேகரன் (67) என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்து ரூ.1500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்