< Back
புதுச்சேரி
சட்டசபை வாசலில் காவலர்கள் தீவிர சோதனை
புதுச்சேரி

சட்டசபை வாசலில் காவலர்கள் தீவிர சோதனை

தினத்தந்தி
|
1 Aug 2023 10:19 PM IST

சபாநாயகர் உத்தரவு எதிரொலி காரணமாக பொதுமக்களை சட்டசபை காவலர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

புதுச்சேரி

புதுவை சட்டசபை வளாகத்தில் விரும்ப தகாத நிகழ்வுகள் நடந்ததை தொடர்ந்து பொதுமக்கள், அரசு ஊழியர்கள் சட்டசபை வளாகத்துக்குள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார். சபாநாயகரின் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சட்டசபைக்கு வந்த பொதுமக்களை சட்டசபை காவலர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த அடையாள அட்டை, ஆவணங்களை சரிபார்த்து அவர்களது தொடர்பு எண்களை பெற்ற பின்னரே சட்டசபை வளாகத்துக்குள் நுழைய அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்