< Back
புதுச்சேரி
ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
புதுச்சேரி

ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை

தினத்தந்தி
|
13 Sept 2023 10:59 PM IST

புதுச்சேரியில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் ரவுடிகள் வீடுகளில் அவ்வப்போது போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் (பெரியகடை), வெங்கடாஜலபதி (ஒதியஞ்சாலை), சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், சந்தோஷ் மற்றும் போலீசார் கிழக்குப்பகுதி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தசாலை, கண்டாக்டர் தோட்டம், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நபர்கள் யாரும் ஊருக்குள் வந்துள்ளார்களா? என சோதனை நடத்தினார்கள். மேலும் போலீஸ் அதிகாரிகள், 'பொது மக்களிடம் உங்களுக்கு யாரும் தொல்லை கொடுத்தால் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்' எனவும் உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்