< Back
புதுச்சேரி
ஸ்கூட்டர், செல்போன் திருடியவர் கைது
புதுச்சேரி

ஸ்கூட்டர், செல்போன் திருடியவர் கைது

தினத்தந்தி
|
7 July 2023 11:32 PM IST

தேங்காய்திட்டு துறைமுகத்தில் ஸ்கூட்டர், செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது63). மீனவர். இவர் தேங்காய்திட்டு துறைமுகத்தில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. அதேபோல் அவருடன் வேலை செய்து வந்த வடிவேலு என்பவரின் செல்போனும் மாயமாகி இருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்கூட்டரையும், செல்போனையும் திருடியது சிதம்பரம் மொடச்சல் ஓடையை சேர்ந்த சிவா (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஸ்கூட்டர், செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்