< Back
புதுச்சேரி
வீடுபுகுந்து பணம் திருடியவர் கைது
புதுச்சேரி

வீடுபுகுந்து பணம் திருடியவர் கைது

தினத்தந்தி
|
14 Jun 2023 10:39 PM IST

மதகடிப்பட்டில் வீடுபுகுந்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

மதகடிப்பட்டு

மதகடிப்பட்டு காமாரஜ் நகரை சேர்ந்தவர் மாதவன். இவர் இறந்த பின்னர் மனைவி சுமதி, தனது கடைசி மகள் செல்வராணியுடன் வசித்து வருகிறார். சுமதி அப்பகுதியில் உள்ள சோப்பு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை அவர் வேலைக்கு சென்று விட்டார். மகள் செல்வராணி தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின்பின்புற கதவு திறந்து கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர். புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து. பணம் திருடிய மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு சேர்ந்த பிரபு (வயது 28) என்ற வாலிபரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்