< Back
புதுச்சேரி
புதுச்சேரி
டீ மாஸ்டரை தாக்கியவர் கைது
|3 July 2023 11:12 PM IST
கோட்டுச்சேரி அரகே டீ மாஸ்டரை தாக்கியவர் பொலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் காஜியார் தெரு மீராப்பள்ளி தோட்டத்தை சேர்ந்தவர் நைனாமுகமது (வயது 62). டீ மாஸ்டராக வேலை செய்கிறார். இவர் நேற்று மதிய உணவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றார். அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர், சாப்பிட்டு கொண்டிருந்த நைனாமுகமதுவிடம் தகராறு செய்து, கருங்கற்களால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நைனாமுகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நைனாமுகமதுவை தாக்கிய சீர்காழியை சேர்ந்த சிவகுமார் என்பவரை கைது செய்தனர்.