< Back
புதுச்சேரி
தட்டிக்கேட்ட அண்ணன், தம்பிக்கு கத்திக்குத்து
புதுச்சேரி

தட்டிக்கேட்ட அண்ணன், தம்பிக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
9 Feb 2023 10:08 PM IST

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்ததை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்,

காரைக்கால்

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). இவர் நேற்று தனது சகோதரர் முருகராஜை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (28) என்பவர் மோட்டார் சைக்கிளில் அவர்கள் மீது மோதுவதுபோல் வந்தார்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த லட்சுமணன், அவரது சகோதரர் முருகராஜ் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணன், தம்பி இருவரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்